Here is the Neenga Nalla Irukkanam Song Lyrics in Tamil / English. Select any below option.
Neenga Nalla Irukkanam Lyrics in English
Film / Album : Idhayakkani
Lyrics Writer : Pulamaipithan
Singers : Seerkazhi Govindarajan, T. M. Soundararajan , S. Janaki
Music by : M. S. Vishwanathan
Male : Thennagamaam inba thirunaattil
Maeviyadhor
Kanandathu kudagu malai
Kanivayittril karuvaagi
Thalai kaaviri ennum thaadhiyidam uruvaagi
Female : Vannam paadi
Oru valar thendral thaalaatta
Kannampaadi anai kadandhu
Nalam paadi
Male : Yaer veezhchi kaanaamal irukka
Siva samuthira neer veezhchi enum paeril
Neenda varalaaraai
Female : Veedu thaandaa karpu vilangum
Tamil magal pol
Kaadu thaandum kaaviriyaai
Adangi nadanthu
Aganda kaaviriyaai pin thavazhndhu
Male : Karikaalan per vaazhum
Kallanaiyil kollidathil
Kaanum idamellaam
Thaavi perugi vandhu
Thanjai valanaattai
Thaayaagi kaappavalaam
Thani karunai kaaviri pol
Female : Sellum idamellaam
Seer perukki paer nirutthi
Kallum kaniyaagum
Karunaiyaal ellorkkum
Male : Pillai yena naalum
Pesa vandha kanmaniyae
Vallalae engal vaazhvae idhayakkani
Both : Engal idhayakkani idhayakkani
Female : Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naattil ulla ezhaigalin
Vaazhvu munnaera
Female Chorus :
Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naattil ulla ezhaigalin
Vaazhvu munnaera
Male : Endrum nallavanga ellaarum
Unga pinnaalae
Neenga nenachadhellaam nadakkumunga
Kannu munnaalae
Both : Endrum nallavanga ellaarum
Unga pinnaalae
Neenga nenachadhellaam nadakkumunga
Kannu munnaalae
Chorus : Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naattil ulla ezhaigalin
Vaazhvu munnaera
Male : Uzhaikkum thozhargalae
Ondru koodungal
Ulagham namadhu endru
Sindhu paadungal
Male : Uzhaikkum thozhargalae
Ondru koodungal
Ulagham namadhu endru
Sindhu paadungal
Maedu pallam illaadha
Samudhaayam kaana
Enna vazhi endru enni paarungal
Annaa sonna vazhi
Kandu nanmai thaedungal
Annaa sonna vazhi
Kandu nanmai thaedungal
Male : Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naadengum illaamai
Illai endraaga
Female : Paadu pattu chaettha porulai
Kodukkum podhum inbam
Vaadum ezhai malarndha mugathai
Paarkkum podhum inbam
Naam paadu pattu chaettha porulai
Kodukkum podhum inbam
Vaadum ezhai malarndha mugathai
Paarkkum podhum inbam
Male : Peraasaiyaalae vandha thunbam
Suyanalathin pillai
Suyanalamae irukkum nenjil
Amaidhi endrum illai
Peraasaiyaalae vandha thunbam
Suyanalathin pillai
Suyanalamae irukkum nenjil
Amaidhi endrum illai
Amaidhi endrum illai
Chorus : Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naattil ulla ezhaigalin
Vaazhvu munnaera
Male : Kaattrum neerum vaanum neruppum
Podhuvil irukkudhu
Manidhan kaalil patta boomi mattum
Pirindhu kedakkudhu
Kaattrum neerum vaanum neruppum
Podhuvil irukkudhu
Manidhan kaalil patta boomi mattum
Pirindhu kedakkudhu
Male : Pirithu vaithu paarppadhellaam
Manidha idhayamae
Pirithu vaithu paarppadhellaam
Manidha idhayamae ulagil
Pirivu maari orumai vandhaal
Amaidhi nilavumae amaidhi nilavumae
Chorus : Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naattil ulla ezhaigalin
Vaazhvu munnaera
Male : Nadhiyai pola naamum nadandhu
Payan thara vaendum
Kadalai pola virindha idhayam
Irunthida vendum
Male : Vaanam pola pirarukkaaga
Azhudhida vendum
Vaazhum vaazhkkai ulagil endrum
Vilangida vendum vilangida vendum
Chorus : Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naattil ulla ezhaigalin
Vaazhvu munnaera
Neenga nallaa irukkonum
Naadu munnaera
Indha naattil ulla ezhaigalin
Vaazhvu munnaera
Neenga Nalla Irukkanam Paadal Varigal in Tamil
Movie / Album : Idhayakkani
Lyrics Writer : Pulamaipithan
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தென்னகமாம் இன்பத் திருநாட்டில்
மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக்
கனிவயிற்றில் கருவாகி
தலைக் காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
பெண் : வண்ணம் பாடி
ஒரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணை கடந்து
நலம் பாடி
ஆண் : ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க
சிவசமுத்திர நீர்வீழ்ச்சி எனும் பேரில்
நீண்ட வரலாறாய்
பெண் : வீடு தாண்டா கற்பு விளங்கும்
தமிழ் மகள் போல்
காடு தாண்டும் காவிரியாய்
அடங்கி நடந்து
அகண்ட காவேரியாய் பின் தவழ்ந்து
ஆண் : கரிகாலன் பேர் வாழும்
கல்லணையில் கொள்ளிடத்தில்
காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து
தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம்
தனிக்கருணை காவிரிபோல்
பெண் : செல்லும் இடமெல்லாம்
சீர் பெருக்கித் பேர் நிறுத்தி
கல்லும் கனியாகும்
கருணையால் எல்லோர்க்கும்
ஆண் : பிள்ளையென நாளும்
பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
இருவர் : எங்கள் இதயக்கனி இதயக்கனி
பெண் : நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
பெண் குழு :
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
ஆண் : என்றும் நல்லவங்க எல்லாரும்
ஒங்க பின்னாலே
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க
கண்ணு முன்னாலே
இருவர் : என்றும் நல்லவங்க எல்லாரும்
ஒங்க பின்னாலே
நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க
கண்ணு முன்னாலே
குழு : நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
ஆண் : உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று
சிந்து பாடுங்கள்
ஆண் : உழைக்கும் தோழர்களே
ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று
சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத
சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி
கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி
கண்டு நன்மை தேடுங்கள்
ஆண் : நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாடெங்கும் இல்லாமை
இல்லையென்றாக
பெண் : பாடுபட்டுச் சேர்த்த பொருளைக்
கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப்
பார்க்கும் போதும் இன்பம்
நாம் பாடுபட்டுச் சேர்த்த பொருளைக்
கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப்
பார்க்கும் போதும் இன்பம்
ஆண் : பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை………
குழு : நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
ஆண் : காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கெடக்குது
ஆண் : பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனிதர் இதயமே உலகில்
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம்
மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே அமைதி நிலவுமே
குழு : நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
ஆண் : நதியைப் போல நாமும் நடந்து
பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம்
இருந்திட வேண்டும்
ஆண் : வானம் போலப் பிறருக்காக
அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும்
விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்
குழு : நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
Neenga Nalla Irukkanam Lyrics in English
Neenga Nalla Irukkanam Varigal in Tamil
Other Song in Idhayakkani Album
Browse the complete film Idhayakkani songs lyrics.
Movie | Idhayakkani |
Music Director | M.S. Viswanathan |
Lyricist | Pulamaipithan |
Singer | S.Janaki, Sirkazhi Govindarajan, T.M. Soundararajan |
Lyrics Added by: Thuroonan
Contents
Find the song lyrics in english. Share any particular song name or movie name, we will update its song lyrics within a week. Did we missed anything? Please let u know, via the contact form.
We are looking for a passionate movie lovers to join our team. Just update song lyrics & Get rewarded for the work. Leave a request in the contact form.